இளம்பெண்ணை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்வதில் மோதல்- 3 பேர் மீது காரை ஏற்றிய வாலிபர்

தேனாம்பேட்டை நட்சத்திர ஓட்டல் முன்பு இளம்பெண்ணை இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றது தொடர்பான மோதலில் 3 பேர் மீது வாலிபர் காரை ஏற்றினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

சென்னை கோடம்பாக்கத்தில் மகளிர் விடுதியில் தங்கி இருக்கும் இளம்பெண் ஒருவர் ஆண் நண்பர்கள் 3 பேருடன் தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதிக்கு இரவு விருந்துக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த இளம்பெண்ணின் மற்றொரு நண்பர் ஒருவர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டார். இருப்பினும் இளம்பெண்ணை 3 பேரும் கால்டாக்சியில் ஏற்றி தேனாம்பேட்டையில் உள்ள மற்றொரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆண் நண்பர் தன்னுடைய சொகுசு காரில் பின் தொடர்ந்து சென்றார். அதற்குள் அவரது தோழியான இளம்பெண்ணை 3 பேரும் ஓட்டலுக்கு அழைத்து சென்று விட்டனர்.

அதிகாலை 5 மணி அளவில் இளம்பெண் 3 பேருடன் ஓட்டலை விட்டு வெளியே வந்தார். இவர்களுக்காக இரவு முழுவதும் நட்சத்திர ஓட்டலின் வெளியே காத்திருந்த ஆண் நண்பர் இளம்பெண்ணுடன் தகராறு செய்து தாக்கினார். இதனால் 3 பேரும் சேர்ந்து ஆண் நண்பரை தாக்கினர்.

இதனையடுத்து அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத ஆண் நண்பர் சொகுசு காரை வேகமாக ஓட்டி சென்று 3 பேர் மீதும் மோதினார். இதனால் அதிகாலையில் ஓட்டல் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. கார் மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com