தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நர்சுகள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு, பதவி உயர்வு, அலவன்ஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நர்சுகள் இரு பிரிவினராக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நர்சுகள் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை:

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நர்சுகள் இரு பிரிவினராக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில தலைவி நிர்மலா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட நர்சுகள் பெருந்திரளாக கூடி கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு, பதவி உயர்வு, அலவன்ஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல தமிழ்நாடு அரசு செவிலியர்கள் நலச்சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் ராதாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மருத்துவ தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டி.எம்.எஸ். வளாகத்தில் நர்சுகள் போராட்டம் ஒரே நாளில் 2 இடத்தில் நடந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com