

திண்டிவனம்:
திண்டிவனம் முகமது நபி தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது 29). திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகவில்லை.
நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் பரமேஸ்வரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமணம் நடைபெறாத ஏக்கத்தில் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரித்து வருகிறார்கள்.