ஜம்மு காஷ்மீர் - குப்வாராவில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #Jammukashmir
ஜம்மு காஷ்மீர் - குப்வாராவில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்: 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹண்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று ஒரு வாகனத்தில் 

சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Jammukashmir

X

Maalai Malar
www.maalaimalar.com