புல்வாமா என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதுடன், மற்றொரு பயங்கரவாதி சரண் அடைந்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா பகுதியில் நூர்புரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதியை அதிரடியாக சுட்டுக் கொன்றனர். இதேபோல், மற்றொரு பயங்கரவாதி அவர்களிடம் சரண் அடைந்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமாவில் குல்ஷண்புரா பகுதியில் வசித்து வந்த பயங்கரவாதி இந்த ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதியில் இருந்து காணவில்லை.

இந்நிலையில், அந்நபர் பாதுகாப்புப் படையினர் முன் சரண் அடைந்துள்ளார். ஒரு ஏ.கே. ரக துப்பாக்கியை படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேடுதல் வேட்டை நிறைவடைந்தது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com