தீவிரவாத செயல்களுக்கு நிதி பெறப்படுவதாக புகார்: காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

தீவிரவாத செயல்களுக்கு நிதி பெறப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் காஷ்மீர் மாநிலத்தின் 12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை நடத்தியது.
தீவிரவாத செயல்களுக்கு நிதி பெறப்படுவதாக புகார்: காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து நிதி பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தலைநகர் டெல்லி மற்றும் காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த ஜூன் மாதம் சோதனையில் ஈடுபட்டது. காஷ்மீரில் 14 இடங்களிலும் டெல்லியில் 8 இடங்களில் இந்த சோதனை நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், தீவிரவாத செயல்களுக்கு நிதி பெறப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு காஷ்மீர் மாநிலத்தில் இன்று மீண்டும் சோதனை நடத்தியது. 

இது தொடர்பாக மத்திய அரசின் அதிகாரிகள் கூறுகையில், ‘ஸ்ரீநகர், பாரமுல்லா மற்றும் ஹந்த்வாரா மாவட்டங்களைச் சேர்ந்த 12 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஜூலை 24-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com