

நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஹாலெப்-ஐ வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 2-வது இடத்தில் இருந்த வோஸ்னியாக்கி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நம்பர் ஒன் இடத்தை வகித்திருந்தார். அதன்பின் தற்போதுதான் முதல் இடத்தை பிடித்தள்ளார். முதல் இடத்தில் இருந்த ஹாலெப் 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 6-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை வீழ்த்தி 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். சாம்பியன் பட்டம் வென்றாலும் பெடரர் தொடர்ந்து 2-வது இடத்திலேயே நீடிக்கிறார். நடால் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். ஆனால் இருவருக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 155 ஆக குறைந்துள்ளது.