சிங்கப்பூர் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதல் - 10 வீரர்கள் மாயம்

சிங்கப்பூர் கடல் பகுதியில் சென்ற அமெரிக்க போர்க்கப்பல், சரக்கு கப்பலுடன் மோதிய விபத்தில் 10 பேர் மாயமாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதல் - 10 வீரர்கள் மாயம்
Published on

சிங்கப்பூர்:

அமெரிக்காவின் ஜான் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பல் சிங்கப்பூர் கடல் பகுதியில் இன்று சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள்

உள்ளன.

சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவு அருகே சென்று கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல், லிபியாவை சேர்ந்த அல்னிக் என்ற சரக்கு கப்பலுடன் திடீரென மோதியது, இந்த விபத்தில் அமெரிக்க கப்பலில் இருந்து 10 பேர்

மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்தது. ஏனெனில் சரக்கு கப்பலில் இதைவிட அதிக எடையுடன் இருந்தது. ஏனெனில் அதில் 30 ஆயிரம் டன் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த விபத்தில் அமெரிக்க போர்க்கப்பலில் பயணம் செய்த 10 வீரர்கள் மாயமாகினர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளோம். மாயமான வீரர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com