ஈரோட்டில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஈரோட்டில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவில் உண்டியல்
கோவில் உண்டியல்
Published on

ஈரோடு:

ஈரோடு நொச்சிக்காட்டுவலசு வெள்ளப்பாறை பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன்சாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 2 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் கோவிலின் பூசாரி நேற்று அதிகாலை 4 மணிஅளவில் நடையை திறந்து கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்களின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், உண்டியலில் இருந்த பணம் திருட்டு போய் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி, ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com