முக்கூடலில் கோவில் விழாவில் பெண்ணிடம் நகை அபேஸ்

முக்கூடலில் கோவில் விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் மர்மநபர் நகையை பறித்து சென்றார்.
நகை அபேஸ்
நகை அபேஸ்
Published on

முக்கூடல்:

முக்கூடல் வடக்கு குமார சாமியாபுரம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்தையா. இவரது மனைவி பூத்தாய் (வயது 68). இவர் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். நேற்று தனது குடும்பத்தினருடன் முத்துமாலையம்பாள் கோவில் கொடியேற்ற விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பூத்தாய் கழுத்தில் அணிந்திருந்த 65 கிராம் எடையுள்ள செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார்.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் செயின் பறிப்பு சம்பவம் எதுவும் பதிவாகவில்லை.

இதையடுத்து முக்கூடல் போலீசில் முத்தையா புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து  வடமாநிலத்தை சேர்ந்த யாராவது கைவரிசை காட்டினார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com