ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் சத்தம் போட்டதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே அமச்சியாபுரத்தில் கருப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஊர்வலத்தின் போது மகேஸ்வரன் என்பவர் சத்தம் போட்டுக் கொண்டு வந்துள்ளார். இதனை அதே பகுதியைச் சேர்ந்த அய்யங்காளை என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரன் அய்யங்காளையை அரிவாளால் வெட்டி ரத்த காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த அய்யங்காளை மனைவி முத்து லெட்சுமிக்கும் காயம் ஏற்பட்டது. 

மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயமடைந்த அய்யங்காளை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com