சோகத்தூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

சோகத்தூரில் முனியப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சோகத்தூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் முனியப்பன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் ஒரு உண்டியல் உள்ளது. இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே அந்த கொள்ளையனை பொதுமக்கள் விரட்டி சென்றனர். அப்போது ஒரு வீட்டின் கேட்டில் ஏறிய போது கொள்ளையன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் பிடிப்பட்ட கொள்ளையனை சரமாரியாக தாக்கினர். 

இது குறித்து பொதுமக்கள் தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் கோவில் உண்டியலை திருடிய கொள்ளையனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை கைது செய்தனர். 

கொள்ளையனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com