போத்தனூரில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

போத்தனூரில் செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர்.
போத்தனூரில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
Published on

கோவை:

கோவையை அடுத்த போத்தனூர் கணேசபுரத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு கொள்ளையர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கோவில் பூட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

உண்டியலில் சுமார் ரூ.20 ஆயிரம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com