

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ‘ருக்கு’ உயிரிழந்ததால், முதுமலை வனத்துறையினரிடம் இருந்து பெண் யானையை வாங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆண் யானைக்கு அடிக்கடி மதம் பிடிக்கும் என்பதால் ருக்கு பிறப்பிடமான முதுமலையில் இருந்து ருக்குவை போலவே ஒரு பெண் யானை வாங்கப்படுகிறது. யானைக்கான தொகையை வழங்க நன்கொடையாளர்கள் ஏராளமானோர் போட்டி போட்டுள்ளனர். விரைவில், கோவிலுக்கு யானை வாங்கப்பட்டு கொண்டுவரப்பட உள்ளது. #tamilnews