

புதுடெல்லி:
2017ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வானவர்களின் பட்டியல் http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவை மத்திய தேர்வாணையம் வெளியிட்டது. ஐஏஎஸ் பிரதான தேர்வு எழுதிய 13000 பேரில் 2567 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2567 பேரில் 990 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய அளவில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடத்தை பிடித்துள்ளார்.
990 பேரில் தமிழகத்தை சேர்ந்த 42 பேர் இடம்பிடித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட குறைவாகும். தமிழக அளவில் தருமபுரியை கீர்த்தி வாசன் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 29வது இடத்தை கீர்த்திவாசன் பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த மதுபாலன், இந்திய அளவில் 71-வது இடத்தையும், தமிழக அளவில் 2-வது இடத்தையும் பெற்றுள்ளார். #CivilServicesExam #UPSCresult #tamilnews