பீகாரில் ஆட்சியமைக்க எங்களை அழைக்க வேண்டும் - கவர்னரிடம் தேஜஸ்வி யாதவ் கடிதம்

பீகாரில் தனி பெரும்பான்மையுள்ள கட்சி நாங்கள் என்பதால், எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தி ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னரை இன்று சந்தித்தனர். #RJD #SatyapalMalik #TejashwiYadav
பீகாரில் ஆட்சியமைக்க எங்களை அழைக்க வேண்டும் - கவர்னரிடம் தேஜஸ்வி யாதவ் கடிதம்
Published on

பாட்னா:

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். நேற்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, பீகாரில் நாங்களே தனிப்பெரும் கட்சி. எனவே நாங்கள் ஏன் ஆட்சியமைக்கக் கூடாது? என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பீகாரில் தனி பெரும்பான்மை கட்சி என்பதால் எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தி தேஜஸ்வி யாதவ் உள்பட கூட்டணி கட்சிகள் கவர்னரை இன்று சந்தித்து கடிதம் அளித்தன.

இதுதொடர்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பீகார் ராஜ்பவனுக்கு சென்றனர். அவர்கள் கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்து, ஆட்சி அமைக்க கோரும் கடிதம் அளித்தனர் என தெரிவித்தனர்.

கடந்த 2015-ல் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளிலும், பாஜக 53 இடங்களிலும் வென்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. பின்னர், 2017-ல் திடீரென ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் கூட்டணியிலிருந்து விலகி பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #RJD #SatyapalMalik #TejashwiYadav

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com