ஆம்பூர் அருகே மது போதையில் கழுத்தை அறுத்த வாலிபர்

ஆம்பூர் அருகே மது போதையில் வாலிபர் ஒருவர் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகன் நதி வாணன் (26). கூலி தொழிளாலி மது போதைக்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்றிரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நதி வாணன் அங்கிருந்த மது பாட்டிலை உடைத்து தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டார். ரத்தம் பீறிட்டு வலியால் துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com