சொந்த வீட்டிலேயே ரூ.10 லட்சம் திருடிய இளம்பெண் காரணம் என்ன தெரியுமா?.

தனது ஆண் நண்பர் தொழில் தொடங்க சொந்த வீட்டிலேயே ரூ.10 லட்சம் திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோப்பு காட்சி
கோப்பு காட்சி
Published on

மும்பை:

மகராஷ்ரா மாநிலம் மும்பையில் உள்ள கண்டிவாலி பகுதியை சேர்ந்த ராதா குப்தா (19) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி ராதா குப்தா தனது வீட்டில் இருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ராதாவின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர். 

இதையடுத்து விசாரணையை மேற்கொண்டுவந்த போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் கலினா என்ற பகுதியில் பதுங்கியிருந்த ராதா மற்றும் அவரது ஆண் நண்பர் என இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து, ராதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது. அதில் ராதா தனது ஆண் நண்பரான அமீர் நஹசத் கான் வியாபாரம் தொடங்க போதுமான பணம் இல்லாமல் தவித்து வந்ததால் அவருக்கு தனது வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாயை கொடுத்து உதவியதாக தெரிவித்தார். 

ராதா மற்றும் அவரது ஆண் நண்பர் அமீர் என இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 7 லட்ச ரூபாயை மட்டுமே மீட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளனர். தனது நண்பர் வியாபாரம் தொடங்குவதற்காக சொந்த வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் இளம்பெண் 10 லட்ச ரூபாயை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com