மும்பையில் 23-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

மும்பையில் 23-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. #Mumbai #GirlSuicide
மும்பையில் 23-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
Published on

மும்பை:

மும்பை தார்டுதேவ் பகுதியை சேர்ந்தவர் அம்ரிஷ் கோத்தாரி (வயது 48). இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 23-வது மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா (16). நேற்று முன்தினம் வெளியில் சென்றிருந்த பிரியங்கா இரவில் வீடு திரும்பினார். அவருக்காக காத்திருந்த வீட்டு வேலைக்காரர் பிரியங்கா வந்ததும் கதவை திறந்து விட்டு தூங்க சென்று விட்டார். இந்தநிலையில், அதிகாலை 2 மணியளவில் கட்டிட வளாகத்தில் பிரியங்கா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்ததும் பிரியங்காவின் பெற்றோர் மற்றும் குடியிருப்புவாசிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரியங்கா 23-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com