புதுவை ஆம்பூர் சாலையில் சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்த தொழிலாளி கைது

புதுவை ஆம்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
புதுவை ஆம்பூர் சாலையில் சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்த தொழிலாளி கைது
Published on

புதுச்சேரி:

தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க புதுவைக்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வந்து இருந்தனர். அதேபோல் வாரவிடுமுறையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகளும் புதுவைக்கு வந்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று புதுவை ஆம்பூர்சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த வெளிமாநில சுற்றுலா பயணிகளை ஒருவர் ஆபாசமாக பேசி கிண்டல் செய்து கொண்டு இருந்தார். இதையடுத்து அந்த வழியாக ரோந்து சென்ற பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கிண்டல் செய்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கடலூர் வீரபத்திரசாமி கோவில் தெருவை சேர்ந்த மகிமைராஜ் (வயது42) என்பதும், வெல்டர் வேலை செய்து வரும் இவர் தீபாவளியையொட்டி புதுவையில் பொருட்கள் வாங்க வந்த போது குடிபோதையில் சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகிமைராஜை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com