திருவாரூர் அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

திருவாரூர் அருகே வேலைக்கு செல்லக்கூடாது என கணவர் கூறியதால் மனவேதனை அடைந்த ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி கற்பகவள்ளி (வயது 36). இவர் ஊருக்கு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கற்பகவள்ளிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பள்ளிக்கு விடுப்பு எடுத்து இருந்தார். உடல்நிலை சரியானதும் செல்ல முடிவு செய்தார். ஆனால் உடல் நிலையை காரணம் காட்டி இனி நீ வேலைக்கு செல்ல கூடாது. வீட்டியிலேயே இரு என்று கணவர் அருள் கூறினார். இதற்கு கற்பகவள்ளி மறுப்பு தெரிவித்தார். உடல்நிலை சரியாகி விடும். மறுபடியும் வேலைக்கு செல்வேன் என்று கூறினார். இது தொடர்பாக கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. 

சம்பவத்தன்றும் இதேப்போல் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலைக்கு செல்ல கூடாது என கணவர் கூறுகிறாரே என கற்பகவள்ளி மனவேதனை அடைந்தார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்புறம் சென்றார். அங்கு உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை பார்த்து அவரது கணவர், பிள்ளைகள், உறவினர்கள் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்த திருவாரூர் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். கற்பகவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com