ஆசிரியர் திட்டியதால் வீட்டை விட்டு ஓடிவந்த பள்ளி மாணவன் மீட்பு

பள்ளி ஆசிரியர் திட்டியதால் வீட்டை விட்டு ஓடிவந்த 14 வயது பள்ளி மாணவன் தருமபுரியில் மீட்கப்பட்டான்.
மீட்பு
மீட்பு
Published on

தர்மபுரி:

தர்மபுரி பஸ்நிலையத்தில் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் போலீசாரிடம் என்னை மர்ம கும்பல் கடத்திச் சென்றனர் எனவும், அவர்களிடமிருந்து நான் தப்பி வந்துவிட்டேன் எனவும் கூறினான்.

இதனை தொடர்ந்து போலீசார் தர்மபுரி போலீஸ் நிலையத்திற்கு அந்த சிறுவனை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவன் கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் மிதுன்குமார் (வயது 14) என தெரியவந்தது. மேலும் அந்த சிறுவன் அங்கு உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த வந்ததாகவும், பள்ளி ஆசிரியர் அந்த சிறுவனை திட்டியதால் வீட்டிற்கு சொல்லாமல் இங்கு வந்து விட்டதாகவும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி டவுன் போலீசார் மிதுன் குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மிதுன்குமார் பெற்றோர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு இன்று காலை வந்தனர். 

பின்னர், போலீசார் அந்த சிறுவனிடம் அறிவுரைகூறி பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com