ஆசிரியை உடலில் 30 இடங்களில் கத்திக்குத்து - ஆஸ்பத்திரியில் தாயை தேடிய இரட்டை குழந்தைகள்

கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரதிதேவி உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் கொல்லப்பட்டது தெரியாமல் அவருடைய இரட்டை குழந்தைகள் தேடியது கண்ணீரை வரவழைத்தது.
ஆசிரியை ரதிதேவியின் இரட்டை குழந்தைகள்
ஆசிரியை ரதிதேவியின் இரட்டை குழந்தைகள்
Published on

என்ஜினீயரான குருமுனீசுவரன் வகுப்பறைக்குள் புகுந்து அவருடைய மனைவியான ஆசிரியை ரதிதேவியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ரதிதேவியின் உடல் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும் போது, “ரதிதேவி உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தி மற்றும் ஸ்குரு டிரைவரால் குத்திய கொடூர காயங்கள் இருந்தன” என்று தெரிவித்தனர்.

ரதிதேவியின் உடல் கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்தில், அவருடைய தாய்-தந்தையர் காரியாபட்டியில் இருந்து வந்தனர். உறவினர்களும் வந்திருந்தனர். மேலும் தாயை, தன்னுடைய தந்தையே கொன்றது தெரியாமல் அவர்களுடைய இரட்டை குழந்தைகள் ஹர்சவர்ஷினி, ஹர்சவர்ஷன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் அரவணைப்பில் இருந்தனர். தாய்க்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்பதை அறிந்து, அந்த குழந்தைகள் அவ்வப்போது “அம்மா எங்கே... அம்மாவுக்கு என்னாச்சு...?” என்று அப்பாவியாக தேடியதும், விசாரித்ததும் அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com