தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு- 15,819 பேர் எழுதுகிறார்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 15,819 பேர் எழுதுகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு வசதியாக 25 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு- 15,819 பேர் எழுதுகிறார்கள்
Published on

தூத்துக்குடி:

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2019-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தாள்-1 வருகிற 8-ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தாள்-2 வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரையும் நடக்கிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கு 5 ஆயிரத்து 446 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கு 10 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 25 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com