பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் ஆசிரியை உயிரிழப்பு - போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது ஆசிரியை இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியை கோகிலா
ஆசிரியை கோகிலா
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் மணிகண்டன். பஸ், லாரிகள் பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி கோகிலா (32). இவர் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கோகிலா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அம்பராம் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக கூறி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோகிலாவிற்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் கோகிலா இறந்து விட்டார். அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியை கோகிலா

X

Maalai Malar
www.maalaimalar.com