ஆரணியில் ஆசிரியை அடித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

ஆரணியில் ஆசிரியை அடித்ததால் 9-ம் வகுப்பு மாணவி பிளேடால் கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணியில் ஆசிரியை அடித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
Published on

ஆரணி:

ஆரணி டவுன் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். பேக்கரி கடை வைத்துள்ளார்.இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு யாஷிகா (வயது 13), ரூபிகா என்று 2 மகள்கள் உள்ளனர்.

ஆரணி அருகே நெசல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் யாஷிகா 9-ம் வகுப்பும், ரூபிகா 6-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

இந்த நிலையில், மாணவி யாஷிகாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்பு வகுப்பு ஆசிரியை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. தலைமுடியை பிடித்து இழுத்தும் அவமானப்படுத் தியதாக கூறப்படுகிறது. கடந்த 15 நாட்களாக மாணவி மீது துன்புறுத்தல்கள் நடந்துள்ளது.

இதனால் மனமுடைந்த மாணவி யாஷிகா நேற்றிரவு வீட்டில் இருந்தபோது, தனது தங்கையிடம் ‘இனிமேல் நான் உயிரோடு இருக்க மாட்டேன். உங்களை எல்லாமல் விட்டுச் செல்கிறேன்’ என்று விரக்தி நிலையில் பேசியுள்ளார்.

இதுப்பற்றி, தங்கை  ஓடி சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் வருவதற்குள், மாணவி யாஷிகா பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். கை நரம்பு அறுபட்டதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

பெற்றோர், யாஷிகாவை மீட்டு ஆரணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு மாணவி நலமுடன் உள்ளார். இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் ஆசிரியை மீது பெற்றோர் இன்று காலை புகார் அளித்தனர்.

போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com