இலங்கையில் தேயிலை கிடங்கு இடிந்த விபத்தில் 7 பேர் பலி

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு தேயிலை கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #SriLanka #Teawarehousecollapse
இலங்கையில் தேயிலை கிடங்கு இடிந்த விபத்தில் 7 பேர் பலி
Published on

கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு தேயிலை கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானம் அருகில் ஒரு பழைய தேயிலை கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கு நேற்று திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தின்போது அந்த கட்டிடத்தினுள் 12 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசார் மட்டும் மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புப்பணிக்காக ராணுவத்தினரும் அனுப்பப்பட்டனர்.

மீட்புப்பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் ஐந்து பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேயிலை கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SriLanka #Colombo #Teawarehousecollapse #killsseven #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com