

திருச்சி:
திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பீர்முகமது (வயது 20). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ரமணகோபால் (வயது 41) என்பவர் மது போதையில் வந்து பீர்முகமதுவின் டீக்கடையில் இருந்த ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
தகராறு முற்றிய நிலையில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் கடையில் வேலை செய்த ஊழியர்களை ரமண கோபால் தாக்கியுள்ளார்.
இதையடுத்து பீர்முகமது அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் ரமணகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.