கும்பகோணத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசரை கத்தியால் குத்திய வாலிபர்

கும்பகோணத்தில் பிராந்தி இல்லை எனக் கூறிய டாஸ்மாக் சூப்பர்வைசரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசரை கத்தியால் குத்திய வாலிபர்
Published on

கும்பகோணம்:

நெல்லை மாவட்டம் திருமலைபுரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 35). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு கும்பகோணம் அடுத்த பூக்கொல்லையை சேர்ந்த ராஜேஷ் (30) என்பவர் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்தார். பின்னர் அவர் பிராந்தி கேட்டார். அதற்கு சண்முகநாதன் பிராந்தி காலியாகி விட்டது என கூறினார். இதை கேட்ட ராஜேஷ் ஆத்திரம் அடைந்து சண்முகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சண்முகநாதனின் கழுத்தில் குத்தினார். 

இதில் ரத்தவெள்ளத்தில் சண்முகநாதன் கீழே சரிந்து விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை டாஸ்மாக் கடைக்கு வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சண்முகநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com