தாராபுரத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசர் மீது தாக்குதல்- 2 பேர் கைது

தாராபுரத்தில் டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கிய பார் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

தாராபுரம்:

தாராபுரம் - பழனி ரோட்டில் பைவ் கார்னர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக மணிவேல் (51) இருந்து வருகிறார். இவர் பணியில் இருந்த போது சீல் வைக்கப்பட்ட பாரை பாரின் உரிமையாளர் செல்வன் திறந்து விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை மணிவேல் தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டாஸ்மாக் சூப்பர் வைசர் மணிவேலை பார் உரிமையாளர் செல்வன், ஊழியர்கள் சூர்யா மற்றும் அஜய் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளனர். 

மேலும் கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர். இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் மணிவேல் படுகாயம் அடைந்தார். அவர் டாஸ்மாக் விற்பனையாளர் கனகராஜ் உதவியுடன் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தாராபுரம் போலீசில் மணிவேல் புகார் அளித்தார். போலீசார் பார் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இதில் ஊழியர்கள் சூர்யா, அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பார் உரிமையாளர் செல்வத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com