

நாகர்கோவில்:
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். (வயது 35). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பாலமுருகன் நாகர்கோவிலுக்கு வந்தார். இங்கு அவர் ஆசாரிப்பள்ளத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் பாலமுருகன் மனவருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். நேற்று வீட்டிற்கு அவர் செல்லவில்லை. அவரை தேடிவந்தனர். இன்று காலை ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மரத்தில் தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews