ஜனவரி 25-ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

பணி நிரந்தரம் மற்றும் சீரான சம்பள விகிதம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 25-ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஜனவரி 25-ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
Published on

திருச்சி:

பணி நிரந்தரம் மற்றும் சீரான சம்பள விகிதம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 25-ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

திருச்சி நகரில் இன்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் ’பணி நிரந்தரம் மற்றும் சீரான சம்பள விகிதம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 25-ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com