டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

ராஜபாளையத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை கொள்ளை
டாஸ்மாக் கடை கொள்ளை
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் ரெயில் நிலையம் அருகே டி.பி.மில்ஸ் சாலையில் அரசு டாஸ்மாக்கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு விற்பனை பணத்தை எடுத்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை ஆவரம்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் சின்ன துரை கடைக்கு வந்தார். அப்போது கடையின் முன்பகுதியில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் கடையில் உள்ள ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவையும் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இந்தநிலையில் கடையின் எதிரே தண்டவாளத்திற்கு அருகே காலியான மதுபாட்டில்கள் கிடந்தது. பின்னர் அங்குள்ள கழிவுநீர் ஓடையில் பார்த்த போது அதில் 12 மதுபாட்டில்களை கொள்ளையர்கள் வீசி சென்றது தெரியவந்தது. இந்த மதுபாட்டில்களை மேற்பார்வையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். கடையில் மதுபாட்டில்கள் திருடிய மர்மநபர்கள் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com