டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் முன்னீர்பள்ளம் டாஸ்மாக் குடோன் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் முன்னீர்பள்ளம் டாஸ்மாக் குடோன் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளுக்கு தரமான முககவசம், கையுறை, கிருமி நாசினி மற்றும் தெர்மல் ஸ்கேனர் கருவி வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க தலைவர் மாரியப்பன், பொதுச்செயலாளர் சரவணபெருமாள், பொருளாளர் இளமுருகு மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மோகன், சுடலைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com