

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திராயன்-2 செயற்கை கோளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சந்திராயன்-2 செயற்கை கோளின் எடை 3 ஆயிரத்து 850 கிலோவாக உயர்த்தப்பட்டதால், ஜி.எஸ்.எல்.வி.எம்.கே-2 ரக விண்கலத்தில் செலுத்த முடியாது எனவும், இதற்காக ஜி.எஸ்.எல்.வி.எம்.கே 3 மறுவடிவமைப்பு செய்யப்படுவதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தை அடைய இருக்கும் செயற்கை கோள் சந்திராயன்-2 எனவும், இது 40 நாள்கள் பயணித்து தனது இலக்கான நிலவை அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.