பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பியன்ட் சிங்கை மனித வெடிகுண்டு மூலம் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. #BeantSingh #assassinationcase #lifeimprisonment
பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்புவகித்த பியன்ட் சிங், கடந்த 31-8-2015 அன்று அம்மாநில தலைமை செயலகத்தின் முன்னர் மனித குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். மனித குண்டாக செயல்பட்ட போலீஸ்காரர் உள்பட மேலும் 17 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்த படுகொலைக்கு திட்டம் தீட்டி செயல்படுத்தியதாக தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியான ஜக்தர் சிங் தாரா என்பவரை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்மீது கொலை, சதிதிட்டம் தீட்டுதல், வெடிப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சண்டிகர் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

பியன்ட் சிங்

இதற்கிடையில், புரைல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜக்தர் சிங் தாரா கடந்த 2004-ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பியோடினார். பின்னர், கடந்த 2015-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் இன்று கூடுதல் மாஜிஸ்திரேட் ஜே.எஸ். சித்து தீர்ப்பளித்தார். ஜக்தர் சிங் தாரா அடைத்து வைக்கப்பட்டுள்ள புரைல் சிறைக்கு சென்ற மாஜிஸ்திரேட் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். #tamilnews #BeantSingh #assassinationcase #lifeimprisonment

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com