தஞ்சையில் கனமழை: காவலாளியின் வீடு இடிந்து விழுந்தது

தஞ்சையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதில் காவலாளியின் வீடு இடிந்து விழுந்ததில் பொருட்கள் அனைத்தும் இடிபாடுக்குள் சிக்கி சேதமாகின.
மழை
மழை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மானோஜியப்பா வீதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 56). இவர் தஞ்சை கலைக்கூடத்தில் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். 

நேற்று இரவு தனது குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழையில் சுவர் பயங்கர சத்தத்துடன் சரிய தொடங்கியது. திடுக்கிட்டு எழுந்த செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் வேகமாக வீட்டை விட்டு வெளியே ஓடி உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் ஓடு சரிந்து வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் இடிபாடுக்குள் சிக்கி சேதமாகின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

வீடு இடிந்து விழுந்ததில் தெருவில் போக்குவரத்து முடங்கியது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com