ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு

தஞ்சையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொள்ளை
கொள்ளை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மகர்நோன்புசாவடி மிஷன் புதுத்தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருடைய மனைவி ராதிகா கிறிஸ்டியானா (வயது59). சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக திருச்சிக்கு சென்றார். பின்னர் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

தஞ்சை புதிய பஸ் நிலையம் வந்ததும் அங்கிருந்து பழைய பஸ் நிலையத்துக்கு செல்லும் நகர பஸ்சில் ஏறினார். பஸ் தஞ்சை ரெயில் நிலையத்தை அடைந்ததும் இறங்கினார். பின்னர் வீட்டிற்கு சென்ற ராதிகா கிறிஸ்டியானா தனது கைப்பையை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் இருந்த மணிப்பர்சை காணவில்லை. அதில் 12 பவுன் நகைகள், ரூ. 600 ரொக்கம், செல்போன் ஆகியவை இருந்தது.

பஸ்சில் பயணம் செய்த போது யாரோ மர்ம நபர்கள் திருடிஇருக்கலாம் என கருதினார். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ராதிகா கிறிஸ்டியானா புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com