

இந்த போட்டியில் தமீம் இக்பால் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் அணியும், மோர்தசா தலைமையிலான ரங்பூர் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களம் இறங்கிய ரங்பூர் ரைடர்ஸ் 97 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொமிலா விக்டோரியர்ன்ஸ் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கான ஆடுகளம் மிகவும் ‘பயங்கரமானது (horrible)’ என தமீம் இக்பால் விமர்சனம் செய்திருந்தார். வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தால் பராமரிக்கப்படும் ஆடுகளத்தை தேசிய வீரர் ஒருவர் மோசமான அளவில் விமர்சனம் செய்ததால், விளக்கம் கேட்டு தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுத்தியது.
இந்நிலையில், ஆடுகளம் குறித்து தான் கூறிய கருத்துக்கு தமீம் இக்பால் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தமீம் இக்பால் கூறுகையில் ‘‘நான் இதைவிட சிறந்த வார்த்தையை பயன்படுத்திருக்க வேண்டும். என்னுடைய கருத்து குறித்து அவர்களுடைய கவலையை தெரிவித்தனர். அதை உண்மையிலேயே நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கேற்ற வகையில் நான் மாற்று வார்த்தையை பயன்படுத்தி கருத்து கூறியிருக்க வேண்டும்.