சுத்தமல்லியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது

சுத்தமல்லியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரசாத் (வயது 21). அதே பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவரின் மகன் தங்கப்பாண்டி (30) மற்றும் பேட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மகன் ஆகாஷ் (21). இவர்கள் 3 பேரும் சுத்தமல்லி விலக்கு பகுதியில் காரில் வைத்து கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். 

தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com