

ஆளுங்கட்சி குறித்து சமீப காலமாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க. பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து பதிவிட்ட புகாரில் திருச்சி தி.மு.க. எம்.பி. மகன் திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.
அவருடன் தொடர்பில் இருந்த முக்தார் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் தற்போது பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையிலான அரசு மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.
மக்கள் மனதில் தகாத எண்ணங்களை உருவாக்கும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.வினர் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார், யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் அவரை கைது செய்வதற்காக சென்னையிலிருந்து மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீசார், மதுரை மாநகர காவல் துறையுடன் இணைந்து மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
அங்கு வீட்டில் இருந்த யூடியூபர் மாரிதாஸை விசாரணைக்காக கைது செய்து காவல்துறை வாகனத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.