நத்தத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி கைது

குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜேந்திரன்.
ராஜேந்திரன்.
Published on

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டி ராஜாகுலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). லாரி டிரைவர். இவரது மனைவி பாண்டீஸ்வரி (33). ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ராஜேந்திரன் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் இருந்த கடப்பாரையால் கணவனை தலையில் அடித்தார். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி பாண்டீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com