கோட் சூட் போடுவது பிரச்சனை இல்ல.. கோட்டை விடுவதுதான் பிரச்சனை- உதயநிதி ஸ்டாலின்

கருப்பு கோட் போடுவது பெரியார் நினைவாக என்கிறார், இதைவிட பெரிய உருட்டு ஏதாவது இருக்கிறதா?
கோட் சூட் போடுவது பிரச்சனை இல்ல.. கோட்டை விடுவதுதான் பிரச்சனை- உதயநிதி ஸ்டாலின்
Published on

நான் கோட் போடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் கோட் போடணுமா என முதலமைச்சர் விஜய் பேசியதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில்,"அவர் கருப்பு கோட் போடுவது பெரியார் நினைவாக என்கிறார், இதைவிட பெரிய உருட்டு ஏதாவது இருக்கிறதா? கோட் சூட் போட்டதெல்லாம் பிரச்னை கிடையாது. எல்லா விதத்திலும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அதுதான் பிரச்னை!” என்றார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

எதைக் கேட்டாலும் திமுக செய்கின்ற சதி என்று கூறுகிறார்; இப்படிப்பட்ட முதலமைச்சரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள், அந்த முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தூர சக்தி, ஓர சக்தி, பார சக்தி என்று திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் போல ரைமிங்காக டயலாக் பேசுகிறார்.

ஸ்டிக்கரை மாற்றி, சிங்கப்பெண் என்ற திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லி அதையும் கொண்டுவர வக்கில்லாத ஒரு சோபா மாடல் ஆட்சி தற்போதைய ஆட்சி.

யாரு சட்டமன்ற உறுப்பினர் யாரு அமைச்சர்ன்னு முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ஆட்சி நடக்குது.

தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தவெக அரசின் முகத்திரையை கிழிப்பார்கள், முடிவரை எழுதுவார்கள்.

ரீல்ஸ் போட்டவர்கள் செய்தி பார்க்கிறார்கள் என முதல்வர் கூறியதற்கு அதுதான் உங்கள் வீழ்ச்சிக்கு காரணமாகப்போகிறது.

மக்கள் சட்டமன்றத்தை தொடர்ந்து கவனிப்பார்கள், இந்த மாற்றமும் விழிப்புணர்வும் தான் தவெகவின் வீழ்ச்சிக்கு காரணமாகப்போகிறது.

மீண்டும் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டு நன்றி கூட சொல்லாம போன நன்றிகெட்ட கூட்டம்.

எமர்ஜென்சியை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது எங்கள் ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று மக்களுடன் நின்றது திமுக.

பயம் என்பது திமுகவிற்கு கிடையாது. எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும் மீண்டும் எழுந்து வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com