மறைந்த மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் உடல் தகனம்

முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முக்கிய பிரமுகர்கள் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் உடல் தகனம்
Published on

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்ககாக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொது மக்கள் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

முக்கிய பிரமுகர்கள் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பெசன்ட் நகர் மின்மயானம் வந்தடைந்த முரொசலி செல்வம் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com