வி.சி.க. கொடிக்கம்பம் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு- தொண்டர்கள் கொண்டாட்டம்

அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
வி.சி.க. கொடிக்கம்பம் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு- தொண்டர்கள் கொண்டாட்டம்
Published on

மதுரையில் காவல்துறையினர் எடுத்துச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் மீண்டும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொடிகம்பத்தை மீண்டும் வழங்கியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் நடனமாடி கொண்டாடினர்.

புதூர் பகுதியில் அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.

இதனால், கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், விசிக கொடுக்கம்பம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரேன் மூலம் எடுத்து வரப்பட்ட 62 அடி உயர கொடிக்கம்பத்தை நடுவதற்கான பணியில் விசிக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

விசிக கொடி ஏற்றுவதில் பல்வேறு காரணங்களை கூறி மதுரை ஆட்சியர் தடை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மூத்த அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என திருமாவளவன் கூறி இருந்த நிலையில் கொடிக்கம்பம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com