குழந்தைகளை சீரழிக்கும் கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் - வானதி சீனிவாசன்

தமிழகத்தில் இன்று பிஞ்சு குழந்தைகள் கூட காமுக அரக்கர்களின் கீழ்தரமான செயலுக்கு பலியாகி இருப்பது கடும் வேதனைக்குரியது.
Vanathi Srinivasan
Published on

பாஜக முன்னாள் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருவள்ளூரில் வட மாநில தம்பதியரின் மூன்று வயது குழந்தை வடமாநில இளைஞர்களால் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலம் என்ற பெருமை பெற்ற தமிழகத்தில் இன்று பிஞ்சு குழந்தைகள் கூட காமுக அரக்கர்களின் கீழ்தரமான செயலுக்கு பலியாகி இருப்பது கடும் வேதனைக்குரியது. தங்கள் வீட்டிலும் பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள் என்பதை மறந்து பெண்களை, குழந்தைகளை சீரழிக்கும் இவர்களைப் போன்ற கயவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஆரம்பித்த நாள் முதல் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் சிங்கப்பெண் அதிரடிப்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com