டெல்டா மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம்- செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பு

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொள்கிறார்.மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி யிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார்.
டெல்டா மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம்- செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பு
Published on

சென்னை:

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் அவுரித் திடலில் நாகை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டமும், இரவு 7 மணிக்கு மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டமும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு பட்டுக் கோட்டையில் பழஞ்சூர் செல்வம் இல்ல திருமண விழாவிலும், 11 மணிக்கு பரமேஸ்வரன் இல்ல திருமண விழாவிலும் 12 மணிக்கு மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி யிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் 12.30 மணி அளவில் பட்டுக் கோட்டை கோமதி விலாசில் தஞ்சை தெற்கு மாவட்ட முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கும் திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் உதயநிதி பங்கேற்று பேசுகிறார்.

நாளை மறுநாள் (திங்கட் கிழமை) காலை 11 மணி அளவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகளின், மாலை 4 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலவலக ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்கும் உதயநிதி அன்று இரவு அரியலூர், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

வருகிற 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு விருத்தாச்சலம் கழுதூரில் நடைபெறும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி கலந்து கொள்கிறார். இதில் கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அன்று மாலை 4 மணி அளவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொள்கிறார்.

முன்னதாக இன்று காலையில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மண்டல ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.

நேற்று தஞ்சை மற்றும் திருவாரூரில் நடந்த தி.மு.க. இளைஞர் அணிசெயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com