

2026-27 ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட முழுமையான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி நிர்வாகத்தை சீரமைக்கவும், நலத்திட்டங்களை முறையான பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைளை முடுக்கிவிட்டுள்ளது.
2026-27 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.3,50,027 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் நிதி நிலைமையை முழுமையாகச் சீரமைத்து சமநிலைக்குக் கொண்டுவர குறைந்தது 2 ஆண்டுகள் வரை தேவைப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் நிதி ஆதாரங்களைச் சரியாகப் பயன்படுத்த, நலத்திட்ட உதவிகள் பெறத் தகுதியான உண்மையான பயனாளிகளை நேர்மையாக ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி ஆதாரங்களை பெருக்கவும், கசிவுகளைத் தடுக்கவும், பயனாளிகள் ஆய்வை முறைப்படுத்தவும் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான உயர்மட்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால அரசியல் ஆதாயங்களைக் கருத்தில் கொள்ளாமல், நீண்டகால நிதிப் பாதுகாப்பையும், தகுதியுள்ள அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் சென்று சேர்வதையும் அரசு முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.