முயல் வேட்டைக்கு சென்ற இருவர் சடலமாக மீட்பு- போலீஸ் விசாரணை

அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சடலமாக மீட்பு.வனப்பகுதிக்கு சென்று தேடிய நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.
முயல் வேட்டைக்கு சென்ற இருவர் சடலமாக மீட்பு- போலீஸ் விசாரணை
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவரை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், வீடு திரும்பாததால் இருவரையும் உறவினர்கள் தேடி வந்தனர்.

வனப்பகுதிக்கு சென்று தேடிய நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.

இருவரும் முயல் வேட்டைக்கு சென்றபோது, மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com