வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை- இருவர் கைது

வேலை கேட்பதற்காக சென்று நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்.
Robbery at gunpoint
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடந்த 11ம் தேதி, தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி என்ற பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கலைச்செல்வியின் மருமகன் நடத்தி வரும் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் வேலை செய்த இளைஞர் கொள்ளையில் ஈடுபட்டதும், அதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கள்ளச்சந்தையில் வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

வேலை கேட்பதற்காக சென்று நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ராஜகுகன் (22) மற்றும் அஜித்குமார் (22) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 9½ சவரன் நகைகள், பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com